Friday, June 22, 2012

சாயிபாபாவும் நானும் ஒன்றாகவே மேஜிக் படித்தவர்கள் - P.C.சர்க்கார்


                     உண்மையான அற்புதம் காலத்தைக் கடந்து மனதைத் தாண்டி நிலவுதல் மட்டுமேதான். அத்தகைய நிலை பெற்றவர்கள், பொதுவழக்கில் ‘அற்புதங்கள்’ என்று கருதப்படுகின்றவற்றை மதிப்பதில்லை.

                             அவர்களைப் பொறுத்தவரை, மிகச் சாதாரணமான சின்னச் சின்ன விஷயங்களிலேயே அற்புதம் பொதிந்துள்ளது. சாதாரண வாழ்வினைப் புத்துணர்வுடன் சந்திக்க கூடிய நுட்ப உணர்வோ உக்கிரமோ அற்றவர்கள்தான், அற்புதங்களைக் கௌரவிப்பார்கள்.


                              சத்தியசாயி பாபா என்பவர் அற்புதங்களின் மூலம் மட்டுமே பிரசித்திபெற்றவர். இவரைப் பத்திரிகை ஆசிரியர்கள், விஞ்ஞானப் பேராசிரியர்கள், இலங்கையின் ஆபிரகாம் கோவூர் போன்ற பகுத்தறிவுவாதிகள் விமர்சித்திருக்கிறார்கள்.

                             இவர்களின் விமர்சனத்தின்படி சத்திய சாயிபாபா வெறும் கண்கட்டு வித்தைக்காரர். அற்புதங்கள் என்று எதுவுமே கிடையாது என்ற அளவுக்குப் போனவர்கள் கோவூரும் அவரைப் போலச் சிந்திப்போரும்.


                             இஸ்ரேலின் யூரிகெல்லர், தம்மைத் தெய்வீகச் சக்தி பெற்ற அற்புதமனிதராக விளம்பரம் செய்தவர். நூலில் கட்டித் தொங்கவிடப்பட்ட ஒரு சாவியை, உற்றுப் பார்ப்பதன் மூலம் மட்டுமே வளைப்பது அவரது அற்புதம். இது வெறும் கண்கட்டு வித்தை என்று நிரூபித்தவர் உலகத்தின் மிகப் பெரிய மாஜிக் நிபுணரான பிரதீப் சந்திர சர்க்கார். இவர் ஒரு வங்காளி.

                             டெலிவிஷன் காமிராக்களுக்கும் விஞ்ஞானப் பிரமுகர்களுக்கும் முன்னிலையில் யூரிகெல்லர் சாவியை ‘உற்றுப் பார்த்து’ ஒரு புறம் வளைத்தபோது அதே சாவியை அதேபோல் ‘உற்றுப் பார்த்து’  எதிர்ப்புறமாக வளைத்தார் பி.சி.சர்க்கார்.

                        அவரது தீர்ப்பு; ‘தெய்வீக சக்தி மூலமாக இதைத்தாம் செய்ததாக கூறுகிறார் யூரிகெல்லர். நான் இதையே வெறும் மாஜிக் மூலம் செய்துள்ளேன். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு விஷயமறிந்த வட்டாரங்கள், யூரிகெல்லரைப் பற்றிப் பேசுவதே இல்லை.

                             பி.சி.சர்க்காரின் மூலம்தான், சத்திய சாயிபாபாவின் அற்புதங்களுக்கு கூட அதிர்ச்சித் தாக்குதல் கிடைத்தது. இந்நிகழ்ச்சியை சர்க்கார் விவரித்துள்ளார். ‘சாயிபாபாவும் நானும் ஒன்றாகவே மாஜிக் படித்தவர்கள். நான் அவரிடம் இன்டர்வியூ கேட்டபோது மறுத்துவிட்டார். ஆகவே நான் வேறுபெயரில் மீண்டும் கேட்டு அவரைச் சந்திக்க ரூமுக்குள் காத்திருந்தேன்.

                             அங்கே மேஜையில் நிறைய ஸ்வீட் வகைகள் இருந்தன. உள்ளே வந்த சாயிபாபா, வெற்று வெளியிலிருந்து எடுப்பது போல ஒரு ஸ்வீட் வரவழைத்து, என்னிடம் கொடுத்தார். ‘நான் எனக்கு அந்த ஸ்வீட் பிடிக்காது. இதுதான் பிடிக்கும்’ என்று வேறு ஒரு வகை ஸ்வீட்டை வரவழைத்துக் காட்டினேன். அவரும் நானும் செய்தது  ஒரே மாஜிக்கைத்தான். இருவருமே அதற்காக அதே ரூமிலிருந்த ஸ்வீட்டுகளைத்தான் உபயோகித்தோம்.

குளத்துநீரில் மிதிவண்டி ஓட்டும் பி.சி.சர்க்கார்

Tuesday, April 26, 2011

கருணாநிதியிடம் இருப்பது ஆன்மீகமா? பகுத்தறிவா? - தமிழச்சி


கருணாநிதியிடம் இருப்பது ஆன்மீகமா? பகுத்தறிவா?

-- தமிழச்சி

நன்றி: http://www.tamizachi.com/
                

            "நான் கடவுளின் அவதாரம்" என்று கூறுபவர் சாய்பாபா. அதை நம்புவதற்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் பல நாடுகளிலும் ´ஏமாளிகள்´ இருக்கிறார்கள் ´பக்தர்கள்´ என்னும் பெயரில்.

வெற்றுக் கைகளை ஆட்டி, தூக்கி, சுற்றி, குலுக்கி விட்டு கைகளை விரித்துக் காட்டினால் அதில் திருநீரு, மோதிரம், தங்க சங்கிலி, வார்ச் என்று வருவதை பக்தர்களுக்கு கொடுப்பார் சாய்பாபா.

´விலை மதிப்பற்ற ஏதோ காணக் கிடைக்காத பொக்கிஷத்தைப் போல்´ பயபக்தியுடன் பக்தர்களும் வாங்கிக் கொள்வார்கள்.

கை வேலை இப்படி இருக்க, வாய் வழியாக காட்டும் வித்தையை பார்ப்போம்.

´இழுப்பு வந்தவர்களுக்கு நுரை தள்ளுவது போல், திடீரென சாய்பாபாவுக்கு வந்தால் அதில் சிவலிங்கமும் வரும்.´ இதுதான் சாய்பாபாவின் ஸ்பெஷல்.

ஆனால், இதைவிட சிறந்த காட்சிகளை பெரிய ´மேஜிக் ஷோ´ நடத்துபவர்கள் மேடையில் நிகழ்த்துகிறார்கள். அவர்களுக்கு கிடைக்காத பேரும், புகழும், பணமும், அரசியல் செல்வாக்கும், ´காவி அணிந்த ஆசாமி´க்கு கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் ஆன்மீகம்.

கை வேலை, வாய் வேலை இப்படி இருக்க இன்னொரு உறுப்பின் வேலை குறித்தும் பேசப்படாவிட்டால் சாய்பாபாவின் புகழ் முழுமை பெறாது.

´அந்த´ உறுப்புக் கதைக்கு போகும் முன், அந்நிகழ்ச்சி எப்படி நடத்தப்படுகிறது என்பதை பாருங்கள்.

பெரும்பான்மையான மக்கள் வழிபாட்டிற்காக காத்திருக்கும் இடத்தில் சாய்பாபா யாரை நோக்கி விரலை காட்டுகிறாரோ அவர் சாய்பாபாவுடன் செல்ல வேண்டும். அதற்கு பின் சென்ற நபருக்கு என்ன நடந்தது என்பதோ அல்லது அது குறித்து அறிந்து கொள்ளும் அறிவோ பக்தர்களிடம் இல்லை.

சாய்பாபா அழைத்துச் செல்லும் நபர் பெரும்பாலும் சிறுவர்களாகவே இருப்பார்கள். சிறுமிகளைளோ, பெண்களையோ சாய்பாபா அழைத்துச் செல்வதில்லை.

´அப்படி என்னத்தான் செய்கிறார் சாய்பாபா?´ என்று வெளியே தெரியாமல் இருந்த இரசியத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ´அலாயா´ என்பவர் மூலம் வெளியானது.

´சாய்பாபா ஓரினச் சேர்க்கையாளர்.´

17-வயதிலிருந்து ´அலாயா´வுடன் ஓரினச்சேர்க்கை வைத்திருந்ததாக எழுந்த பாலியல் குற்றச்சாட்டிற்கு பின் மேலும் பல பாலியல் குற்றச்சாட்டுகளும் வந்தன. ஆனால் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாய்பாபாவின் ஆசிரமத்தில் இருந்த நான்கு இளைஞர்கள் சாய்பாபாவை கொல்ல முயன்றதாக கூறி அவர்களை அந்த இடத்தியே சுட்டுக் கொன்றது குறித்து பரபரப்பாக செய்திகள் வந்தபோதும் இதுவரையில் அக்கொலைகளின் பின்னணியை விசாரிக்கக்கூட இல்லை இந்திய அரசு.

2008-இல், ´சாய்பாபாவின் உண்மை முகம்´ என்று பிபிசியில் அனைத்து தில்லு முல்லுகளையும் அம்பலப்படுத்தியும் கூட இந்திய அரசு கண்டு கொள்ளவில்லை.

மற்ற போலி சாமியார்களுக்கு சளைத்தவரல்லாத சாய்பாபா இந்திய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கிய பிரபலங்களுடன் நிகழ்வுகளில் கலந்து கொண்டு தனது மோசடிகளுக்கு அதிகாரவர்க்கத்தை அனுசரித்து போகும் அளவுக்கு பொருளாதார பலத்துடன் ஆன்மீக மோசடியில் முன்னணியில் இருப்பவர்.

இந்த கடவுளின் அவதார நாயகன் குறித்து சில தினங்களாய் பரபரப்பாய் செய்திகள் வருகின்றன.

நுரையீரல் மற்றும் நெஞ்சு கோளாறு காரணமாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சாய்பாபாவின் உடல் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் செயற்கை சுவாசம் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்தி.

ஏதேதோ மாயாஜாலத்தில் வழவழித்த சாய்பாபாவுக்கு, மூச்சு விட தடுமாறுகிறார்.

கடவுளின் அவதாரத்திற்கு வந்த சத்திய சோதனையா இது? அல்லது எல்லா மனிதர்களுக்கும் முதுமையில் வரக்கூடிய உடல்பலவீனங்களா? என்பதை கவனியுங்கள்.

ஒரு பக்கம் சாய்பாபா உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்து புட்டபர்த்தியில் இருக்கும் சாய்பாபா மருத்துவனை முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம். பதட்ட நிலையில் இருப்பதால் புட்டபர்த்தியில் 144 தடை உத்தரவு.

இன்னொரு பக்கம் பல்வேறு இடங்களில் சாய்பாபா உடல்நிலை சரியாக வேண்டும் என்று கோயில்களில் பிரார்த்தனை. முக்கிய அரசியல் பிரமுகர்களில் இருந்து சாய்பாபா உடல்நிலை குறித்து கவலை.

இதில் தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலும் சாய்பாபா உடல்நிலை குறித்து கடிதம் எழுதுகிறார் கருணாநிதி.

´சாய்பாபாவின் உடல்நிலை தேறி வழக்கம் போல் மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்க வேண்டும்´ என்று என்று கோரிக்கை வேறு வைக்கிறார் கருணாநிதி.

* [செய்தி: http://www.maalaimalar.com/2011/04/05142428/sai-baba-get-well-soon-karunan.html]

"சாமியார்களின் ஆசீர்வாதத்தில் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்துவிட முடியும்" என்ற நிலைக்கு சென்று விட்டாரா? பகுத்தறிவு வழி வந்ததாக சொல்லிக் கொள்ளும் கருணாநிதி?

´ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது விசாரிக்கும் அக்கறை குறித்து இங்கே விவாதம் இல்லை.´

´ஆன்மீக மோசடி பேர்வழி, உடல்தேறி மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்க வரவேண்டும் என்பது குறித்தே விமர்சனம்´ என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகிறோம்.

´இன்றைய கருணாநிதியின் பகுத்தறிவு சிந்தனை´ இந்த எல்லைக்குள் தான் இயங்குகிறது.

இந்த சிந்தனை தான் மஞ்சள் துண்டுக்கு மாற வைத்தது. சாய்பாபாவிடம் தன் குடும்பத்தினருக்கு ஆசிர்வாதம் வாங்க வைத்தது. இதன் பெயரும் பகுத்தறிவுதான் என்கிறாரா கருணாநிதி?

"ஏழைகளை வஞ்சிக்க ஓர் ஏற்பாடு. அதற்குப் பெயர் மதம். உழைக்கிறவனை ஒடுக்குவதற்கு ஓர் இயந்திரம் - அதற்குப் பெயர் ஜாதி. பகற் கொள்ளை அடிப்பதற்கு ஒரு திட்டம் - அதற்குப் பெயர் பூசை, சடங்கு, தட்சணை" என்கிறார் அண்ணா.

இத்தனை இழி வேலையையும் செய்பவர் தான் சாய்பாபா.

ஆனால், சாய்பாபா மீதுள்ள பாசத்தில் பகுத்தறிவென்ன சாதாரண அறிவை கூட ஒதுக்கி விட்டு, ´சாய்பாபா உடல்நலம் தேறி வழக்கம் போல் ஆசீர்வதிக்க வரவேண்டும்´ என்கிறார் கருணாநிதி.

"பேராசையும், சோம்பேறித்தனமும், ஏமாற்றும் தன்மையும் இல்லாவிட்டால் பிரார்த்தனைக்கு இடமே இல்லை. மற்றும், முன் குறிப்பிட்ட தேவைகளுக்காகப் பிரார்த்தனை செய்வதும், பிரார்த்தனையில் அவைகளை அடையப் பார்ப்பதும், முன் குறிப்பிட்ட சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ள கடவுளைச் சுத்த முட்டாள் என்று கருதி அவனை ஏமாற்றச் செய்யும் சூழ்ச்சி" என்று பெரியார் கூறுவார்.

பெரியார், அண்ணா வழி வந்ததாக கூறும் கருணாநிதியோ முற்றாக ஆன்மீகவாதியாக பேசுகிறார். அதை ஆன்மீகம் என ஏற்க மறுக்கிறார். தான் இன்னும் பகுத்தறிவு வழி நடப்பதாகவே கூறி சுயஇன்பம் அடைகிறார்.

சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்திலும், ´நீங்கள் பகுத்தறிவுவாதியாக வேண்டுமானால் திமுக வுக்கு ஓட்டு போடுங்கள்´ என்கிறார். பகுத்தறிவை கூட மொத்தமாக குத்துகைக்கு எடுத்துக் கொண்டதா திமுக?

கருணாநிதி என்னும் அரசியல் மோசடி ஆள் தாளாரமாக அரசியல் பேசட்டும். அதற்காக பெரியாரையும், பகுத்தறிவையும் போட்டு குழப்பிப் கொள்ளக் கூடாது என்பதே பெரியார் தொண்டர்களின் வேண்டுகோள்.

இறுதியாக ஒன்று. பெரியார் கூறுவார்:

"ஆத்திகர்கள் கொள்கைப்படி, மனிதனுடைய செய்கையும் எண்ணமும், ‘சித்திரபுத்திரனுக்கோ’ ‘கடவுளுக்கோ’ தெரியாமல் இருக்கவே முடியாது. இதற்காகப் பலன் கொடுக்கத் ‘தீர்ப்பு நாளும்’, ‘எமதர்ம ராஜாவும்’ இருந்தே இருக்கிறார்கள். மத்தியில் பிரார்த்தனை, பூசனை என்பவை மேற்கண்ட இரண்டையும் ஏமாற்றவா அல்லது குருவும், புரோகிதனும் பிழைக்கவா என்பது யோசித்தால் விளங்காமல் போகாது."

தமிழச்சி
05.04.2011


தொடர்புடைய இணைப்புகள் :

சாய்பாபாவின் லீலைகள். பகுதி 1
http://www.youtube.com/watch?v=hQJgvS6ILUg

சாய்பாபாவின் உண்மை முகம். பகுதி 2
http://www.youtube.com/watch?v=vdsYsRaNA4k&feature=related

சாய்பாபாவின் உண்மை முகம். பகுதி 3
http://www.youtube.com/watch?v=i1cNHc6lask&feature=related

சாய்பாபாவின் உண்மை முகம். பகுதி 4
http://www.youtube.com/watch?v=QmUn7lkGevE&feature=related

சாய்பாபாவின் உண்மை முகம். பகுதி 5
http://www.youtube.com/watch?v=iK3QlPGYiJA&feature=related

சாய்பாபாவின் உண்மை முகம். பகுதி 6
http://www.youtube.com/watch?v=RskbqOOh6Ig&feature=related

சாய்பாபாவின் உண்மை முகம். பகுதி 7
http://www.youtube.com/watch?v=M3oWmzZI_hs&feature=related

சாய்பாபா: “சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?”

       April 25, 2011 -  

 நன்றி : http://www.vivavu.com/                       

                சாய்பாபா செத்துவிட்டார். அவரது பக்தர்களுக்கோ, ‘கடவுள் இறந்துவிட்டார்’! கடவுளின் மரணம் நிச்சயம் ஒரு வருந்தத்தக்க இரங்கல் செய்திதான். ஆனால் நமக்கோ கடவுளை விடவும், பக்தர்களைப் பற்றியே அதிக கவலை!
பல லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்த சாயிபாபா அந்தப் பணத்தில் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், இலவச மருத்துவமனைகள் என கட்டி வைத்துள்ளார். இப்போது அவருக்கான ஆதரவு சக்திகள் தங்களின் தர்க்கத்துக்கு பயன்படுத்தும் பாய்ண்ட்டும் இதுதான். ‘எப்படியோ சம்பாதிச்சுட்டுப் போகட்டும்ங்க.. எவ்வளவு சேவை செய்யிறாரு. கொள்ளையடிக்கிற மத்த எவனும் இதை செய்யிறானா?’ என்பது பக்தர்களுடையது மட்டுமின்றி, பொதுவான மிடில் கிளாஸ் மனநிலையின் வாதமும் கூட.
’எப்படியோ சம்பாதிச்சுப் போகட்டும்’ என்ற சொற்களின் மூலம் மிகப் பெரிய மோசடித்தனங்களையும், ஏமாற்று வேலைகளையும் மிக எளிமையாக இவர்கள் கடந்து செல்கின்றனர். சாயிபாபாவுக்கு மட்டுமல்ல.. இன்று ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கும், குவைத் ராஜாவுக்கும் கூட இதே தர்க்கத்தைதான் பொதுப்புத்தி பொருத்துகிறது. தேர்தல் களத்தில் தி.மு.க.வின் ஊழல்கள் எல்லாம் வாக்குக்கு எதிரானதாக மாறாது எனச் சொன்ன டீ கடைக்காரர் ஒருவர், ‘நாட்டுல எவன் சார் கொள்ளை அடிக்கல.. ஏதோ அவன் பத்து காசு பார்த்தானா… நமக்கு ரெண்டு காசு தந்தானா.. ரைட்டு ஓ.கே.ன்னுட்டுப் போக வேண்டியதான்’ என்று பெருந்தன்மையாக ஊழலை அங்கீகரித்தார்.
நாட்டின் மிகப் பெரும் கொள்ளைகளுக்குதான் இப்படி என்றில்லை. பன்னெடுங்காலமாக இந்த சிஸ்டம் மக்களை கொஞ்சம், கொஞ்சமாக Corrupt செய்து  வந்திருக்கிறது. அதன் விளைவு… ஊழல் என்றில்லை… எல்லாமே இப்படித்தான் நடக்கும், ஏற்றுக்கொண்டு அனுசரித்துதான் வாழ வேண்டும் என மக்களின் மனங்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. ‘போலிஸ்னா அடிக்கத்தான் செய்வான். அரசியல்வாதின்னா ஊழல் பண்ணத்தான் செய்வான். அதிகாரின்னா லஞ்சம் வாங்கத்தான் செய்வான்’ என சீரழிவுகள் அனைத்தையும் சமூகத்தின் இயல்புகள் என ஏற்றுக்கொண்டிருக்கிறது பொதுப்புத்தி. ‘சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?’ என வடிவேல் கேட்பது வெறும் நகைச்சுவை அல்ல, இந்த சமூகத்தின் மனசாட்சி!
அனைத்தையும் அனுசரித்துப் போவதும், ஊழலையும், பொறுக்கித்தனத்தையும், நேர்மையின்மையையும் அன்றாட வாழ்க்கையின் அம்சங்களாக கொள்வதும் தனிப்பட்ட நபரின் விருப்பத் தேர்வாக இருக்கும் வரை அது ஓர் தனிநபரின் ஆளுமைப் பிரச்னை மட்டுமே. ஆனால் எல்லாவற்றையும் அட்ஜஸ்ட் செய்துபோவது ஒரு சமூக மனநிலையாக மாற்றப் பட்டிருக்கிறது. அதனால்தான் தேர்தலில் போட்டியிடும் யாரும் உத்தமர் இல்லை என தெரிந்தும் மக்கள் வாக்களிக்கின்றனர். தேர்தலில் மட்டுமல்ல.. வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் சமரசத்தால்தான் எல்லோரும் எதிர்கொள்கின்றனர்.
இன்று கல்வி என்பது கொழுத்த பணம் புரளும் வர்த்தகம். தனியார் கல்லூரிகளில் ஒரு எம்.பி.பி.எஸ். சீட் ஒரு கோடி ரூபாய் விலைபோகிறது. இந்த அநீதியை எதிர்த்து ‘கல்வி என்பது அடிப்படை உரிமை. அதை இலவசமாக ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை’ என உரிமையை போராடிப் பெற யாரும் தயாரில்லை. மாறாக, கிடைத்த படிப்பைப் படிக்கவும், ‘பணத்தைக் கொடுத்தாலும் வேலையை முடித்துத் தரும்’ நீரா ராடியாக்களைத் தேடவுமே விரும்புகின்றனர்.
ஆனாலும் அவர்களுக்கு ஒரு கட்டத்தில் மனசாட்சி உறுத்துகிறது. தங்களின் அட்ஜஸ்ட்மெண்ட் வாழ்க்கையை நியாயப்படுத்தத் தொடங்குகின்றனர். மாறாக, தங்களுக்கென ஒரு முற்போக்கு அடையாளத்தை சூடிக்கொண்டவர்களோ… அனைத்தையும் அனுசரித்துச் செல்லும் பச்சோந்தித்தனத்தையே கொள்கையாகப் பேசத் தொடங்குகின்றனர். முற்காலத்தியில் முற்போக்குப் பேசி தற்போது ஓட்டரசியலின் லாபங்களை அறுவடை செய்துகொண்டிருக்கும் (ML to MLA) ரவிக்குமார் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். சந்தர்ப்பவாத அரசியலுக்கு கொள்கை சாயமடித்து… விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டும் வேலையை ரவிக்குமார் சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார்.
இந்த மோசமான சிஸ்டத்தை மாற்றுவதற்குப் பதிலாக இதற்குள் சாமர்த்தியமாக வாழ்வது எப்படி என அனுதினமும் மக்களுக்கு வகுப்பு எடுக்கப்படுகிறது. தன்னை சூழ்ந்திருக்கும் துன்ப துயரங்களுக்கான காரண சக்தியை கண்டறிந்து அகற்றுவதற்குப் பதிலாக… அதன் தாக்குதலை சமாளித்து தற்காத்து வாழ்வது எப்படி என்றே சனங்களுக்குப் போதிக்கப்படுகிறது. ‘ஆயிரம்தான் இருந்தாலும் அவன் புருஷன். நாலு அடி அடிச்சாலும் வாங்கிக்கிட்டு சேர்ந்துதான் வாழனும்’ என்பது அப்பத்தாக்களின் அறிவுரை மட்டுமல்ல… அரசாங்கத்தின் அருளாசியும் இதுதான். ஈஷா தியான மையம், வாழும் கலை… எல்லாம் இந்த கும்பல்தான். நோய் நிவாரணிக்குப் பதில் வலி நிவாரணியும், மயக்க மருந்துமே இவர்களின் பரிந்துரை.
இந்த இடத்தில் நாம் சாயிபாபாவைப் பேசுவோம். சாய்பாபா யார்? அவர் சாதாரண மனிதன். அதனால்தான் இப்போது செத்தும்விட்டார். இத்தனை நாட்கள் தன்னை தெய்வம் என சொல்லிக்கொண்ட சாய்பாபா, மாய மந்திர வித்தைகள் எல்லாம் செய்து உலகம் முழுக்க பக்தர்களை வளர்த்துக்கொண்டு, பல லட்சம் கோடி ருபாய் சொத்துக்களையும் சேர்த்துவிட்டார். அந்த வித்தைகளின் செய்முறை விளக்கம், Working stills வரை வெளியான பின்னும் அவரும் கைவிடவில்லை, மக்களும் அவரை கைவிடவில்லை. இந்த மோசடிகளைப் பேசினால், ‘அவர் தனி மனிதனாக ஒரு நகரத்தையே உருவாக்கியிருக்கிறார். அங்கு பல லட்சம் பேர் மருத்துவ வசதி பெருகின்றனர். கல்வி வசதி பெருகின்றனர்’ என பேச்சை மடை மாற்றுகின்றனர்.
இவ்வளவுப் பேருக்கு இலவசமாக அனைத்தையும் செய்வதற்கு உண்டான பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது? மாய மந்திரத்தில் கொண்டு வந்தாரா? ரிசர்வ் பேங்க் ஆபீஸர் வந்து ஒவ்வொரு நோட்டிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாரா? ‘எல்லாம் பக்தர்கள் கொடுத்தது’ என்பார்கள். ’பக்தர்கள் ஏன் கொடுத்தார்கள்?’ என்றால், ‘இது என்ன கேள்வி? அவர் பகவான், இவங்க பக்தர்கள். குடுக்குறாங்க’ என அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஆக, தான் இறைவன் அல்லது தெய்வீக சக்தி படைத்தவன் என சாய்பாபா தன்னைச் சுற்றி எழுப்பிக் கொண்ட இமேஜ்தான் இத்தனைக்குமான அடிப்படை. அந்த அடிப்படையே பொய்களாலும், மோசடிகளாலும் உருவாக்கப்பட்டது என்பதுதான் பிரச்னையின் மையம்.
உங்கள் மகனோ, தம்பியோ, தங்கையோ தான் வேலைப் பார்க்கும் இடத்தில் அலுவலகப் பணம் 10 லட்சத்தைத் திருடிவிட்டான் என வைத்துக்கொள்ளுங்கள். திருடியப் பணத்தில் நான்கு அனாதைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறான். இப்போது ‘ஏன் திருடினாய்?’ என கேட்டால் ’அதான் அனாதைப் புள்ளைங்களைப் படிக்க வைக்கிறேன்ல’ என பதில் சொன்னால் அது யோக்கியமானதா? ‘ஏதோ தெரியாத்தனமாகத் திருடிவிட்டான். அதை உணர்ந்து பிராயச்சித்தமாக அனாதைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறான்’ என்று சொன்னால் கூட அந்த தர்க்கம் புரிந்துகொள்ளக் கூடியது. குற்றத்தை ஒப்புக்கொள்ளும் குறைந்தப்பட்ச நேர்மையேனும் அதில் உண்டு. ஆனால் பாபாவின் பக்தர்களோ திருட்டையே ஒரு தெய்வீகத்தன்மையாகப் பார்க்கின்றனர்.
சாய்பாபா சம்பாதித்தது = திருட்டுப் பணம் என்ற இந்த ஒப்பீட்டில் பொருந்தாப் புள்ளி ஒன்று உண்டு. ஓர் எல்லைக்குப் பிறகு சாய்பாபா தானாக சென்று யாரிடமும் திருடவில்லை. பக்தர்கள் தானாக வந்து கொட்டிய பணம் அது. ’பக்தர்கள் மனமுவந்து கொடுத்ததை அவர் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்திக்கிட்டார். அது தப்பா?’ என்று கேட்கிறார்கள். வேறு சிலரோ, ’அவர் பணம் சம்பாதிப்பதும், அதற்கு கையாளும் வழிமுறைகளும் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் இறுதியில் அந்த பணம் முழுவதையும் சமூகத்துக்குத் தொண்டு செய்யத்தானே பயன்படுத்துகிறார்? இதில் என்ன தவறு இருக்க முடியும்?’ என கேட்கிறார்கள். அதாவது குடியிருக்குறது குடிசையா இருந்தாலும் போய் சேர்ற இடம் கோயிலா இருக்கனும். காரணம் முக்கியம் இல்லை, விளைவுகளே முக்கியம் என்கிறார்கள். ஆனால் காரணமின்றி செயல் இல்லை. சாய்பாபாவின் மாய மந்திரத்தையும், அவர் நடத்தும் இலவச மருத்துவமனையையும் ஒன்றுடன் ஒன்று பிரித்துப் பார்க்க முடியாது. மந்திரம்தான் மருத்துவமனையின் அஸ்திவாரம்.
இன்று சாயிபாபாவின் பிராண்ட் அம்பாசிடர்களாக இருக்கும் அப்துல் கலாம் முதல் மானா மூனா சிங் வரை, சச்சின் டெண்டுல்கர் முதல் மு.கருணாநிதி வரை சகலரும் பாபாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். தனி விமானத்தில் புட்டபர்த்தி விரைகிறார் ஸ்டாலின். இவர்கள் எப்போதேனும் மக்கள் பிரச்னைக்காக இத்தனை விரைவாக செயல்பட்டதுண்டா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் தவிட்டுத் தொழிற்சாலையில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் ஏற்பட்ட தீ விபத்தில் 17 வட மாநிலத் தொழிலாளர்கள் இறந்துபோனார்கள். ஏறக்குறைய 10 நாட்களுக்கும் மேலாக கேட்பாரின்றி கிடந்த அந்தப் பிணங்களை யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஏனெனில் அவை வி.ஐ.பி.களின் பிணங்கள் அல்ல.
அதிகாரத்துடன் ஒத்துப்போவது, அதிகாரத்துக்கு ஒத்து ஊதுவது, எது பொதுப்புத்தியோ, எது பெரும்பான்மை கருத்தோ, எதற்கு சந்தையில் மவுசு இருக்கிறதோ, எது விலைபோகிற பண்டமோ… அதன் பக்கம் நின்றுகொள்வது்… இதுதான் இந்த சந்தைப் பொருளாதாரம் மக்களிடம் கொண்டு வந்திருக்கும் மனநிலை. இதில் நியாயம், நீதி, அறம் என்பவை எல்லாம் பொருளற்ற வெறும் சொற்கள் மட்டுமே. சுருங்கச் சொன்னால் டிரெண்ட்டுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டும். அவன்தான் சாமர்த்தியசாலி. இப்படி சுயநலமாகவும், ஒட்டுண்ணியாகவும், பச்சோந்தித்தனமாகவும் இருப்பதை கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு தகுதியாகவே கணக்கிடுகின்றன. இதை ஊடகங்கள் தெரிந்தே செய்கின்றன.
சத்குரு ஜக்கி வாசுதேவ் மீது மனைவியை கொலை செய்த வழக்கு நிலுவையில் இருப்பது அனைவரும் அறிந்த கதைதான். இதனால் அவரது வியாபாரத்துக்கு எந்த குந்தகமும் இல்லை. ஊடகங்களில் ஊருக்கு உபதேசித்து அறுவடை செய்த இமேஜை அடியுரமாகப் போட்டு இப்போது ஊர், ஊருக்கு ஈஷா யோகா மையம் நடத்திக்கொண்டிருக்கிறார் சத்குரு. இதேபோல் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மீதும், நித்தியானந்தா மீதும் ஏராளமான சர்ச்சைகள் உண்டு. ஆனாலும் ஊடகங்கள் இவர்களை ஐகான்களாக முன்னிருத்துகின்றன. இதன் மறுகோணம், இவர்கள்தான் இந்தியாவின் இந்துத்துவ சாரத்தை தக்க வைத்துக்கொள்கிற குவி மையங்கள். ’ஏன் டி.ஜி.எஸ்.தினகரன் செய்யவில்லையா?’ என்றால், ஆம் அதுவும் இதற்கு இணையான அயோக்கியத்தனம்தான். ஆனால் எந்த மெயின் ஸ்ட்ரீம் பத்திரிக்கையும் டி.ஜி.எஸ்.தினகரனை வைத்து தொடர் எழுதுவது இல்லை என்பதை நாம் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
சாய்பாபாவைப் பொருத்தவரை கடைசியில் எல்லோரும் வந்து முட்டி நிற்கும் இடம் மனிதநேயம். ’இதையாவது செய்யிறாருல்ல.. மத்தவன் யாரும் செய்யலல்ல’ என்ற புள்ளியில் வந்து நிற்பார்கள். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மனிதநேயம் என எதுவும் இங்கு இல்லை. தமிழ் மக்களின் உள்ளன்போடு கூடிய மனிதநேயத்தை சுனாமி சமயத்தில் நாம் எல்லோருமேப் பார்த்தோம். சுனாமியில் இறந்துபோனவர்களுக்கு வீடும், வாழ்வாதார வசதிகளும் செய்து தருவதாகக் கூறி பல்லாயிரம் கோடி ரூபாய் வெளிநாட்டு நிதி உதவி வாங்கின பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். இன்றுவரை அதில் பாதிப் பணம் கூட செலவிடப்படவில்லை. பல தன்னார்வ நிறுவனங்கள் மீது சுனாமி நிதி முறைகேடு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெறுகின்றன. இதை எப்படி மதிப்பிடுவீர்கள்? ‘என்.ஜி.ஓ. காரன் என்னவோ பண்ணிட்டுப் போறான். எங்கேயோ வெளிநாட்டுல பணம் வாங்கி யாரோ நாலு பேருக்காவது வீடு கட்டி தந்தானா, இல்லையா?’ என இதை நியாயப்படுத்துவது சரியானதா? சாய்பாபாவின் ‘எப்படியோ நல்லது செய்தாருல்ல’ லாஜிக்கும் இப்படித்தான். அவை, ஊரை ஏமாற்றிக் கொள்ளை அடித்தவன் தன் ஏமாளி பக்தர்களுக்கு வீசி ஏறியும் பிஸ்கட் துண்டுகள். அதற்குள் நல்லனவற்றைத் தேடுவது என்பது, பெரியாரின் மொழியில் சொல்வதானால், ‘மலத்துக்குள் அரிசி பொறுக்கும் வேலை!’
இது யாவற்றையும் கடந்து பிறந்தால் இறந்துதானே ஆக வேண்டும்? இதை எழுதிய நான் தொடங்கி வாசிக்கும் நீங்கள் வரை ஒருநாள் சாகத்தான் போகிறோம். அதுபோல் இப்போது சாய்பாபாவும் இறந்திருக்கிறார். வடிவேலு வசனத்தைதான் நானும் சொல்கிறேன், ‘சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?’!

சாய் பாபாவோடு நாத்திகத்தையும் குழியில் புதைத்துவிடுங்கள் கலைஞரே

சாய் பாபாவோடு நாத்திகத்தையும் குழியில் புதைத்துவிடுங்கள் கலைஞரே

               மரணம் எல்லோருக்கும் பொதுவானது, ஆத்திகம் வளர்த்த அவதாரங்களாகட்டும், தேவ தூதர்களாகட்டும், தன்னையே கடவுளாக அறிவித்துக் கொண்டவர்களாகட்டும், நாத்திகம் காத்தவர்களாகட்டும் (நன்றி ஆதி) எல்லோரையும் மரணம் சமமாகவே தழுவியிருக்கிறது, தர்க்கங்களை விட்டுப் பார்ப்போம், இதயம் துடிப்பதை நிறுத்தி, ரத்தம் தனது ஓட்டத்தை நிறுத்தி, மூளை வலியை, உணர்ச்சியை உணர மறுத்து, 21கிராம் உடல் எடையை இழந்தே அத்தனை பேரும் மரித்துப் போயிருக்கிறார்கள். மூன்றாம் நாள், உதிர்ந்த இலை இதுவரை தழைத்தது இல்லை.
மூப்பாலும், உடல் செல்களின் புதுப்பிக்கும் வேகமும் குன்றிப் போய் மரணிப்பது புதிது இல்லை, இதை எந்த மருத்துவராலும் தடுத்துவிட முடியாது, இப்படி இறப்பதை எந்த மருத்துவராலும் வெல்லவும் முடியாது, குறைந்தது இன்று வரை. மூப்பால் அவதிப்பட்டு மருத்துவமனையில் கிடத்தப்பட்டுக் கிடக்கும்  ஒரு மணிதரை சீக்கிரம் உடல்நிலை தேறி வர தன் கருத்தை வாழ்த்தாகவோ விருப்பமாகவோ தெரிவிப்பது இயற்கையான ஒன்று.
பழுத்த ஆத்திகவாதி இறைவன் அருள் உன் மீது படட்டும், உடல் நிலை தேறியதும் திருப்பதி/வேளாங்கன்னி/நாகூர்/xxx/yyy/zzz/aaa சென்று வா என்று பேசுவது வாடிக்கை. அந்நிலையிலும் அவர்கள் தான் கொண்ட கொள்கையை இழக்க மாட்டார்கள். (அற்ப வயதில் இறந்து போன ஒருவனுடைய/ஒருத்தியுடைய குடும்பத்தில் சிலர் விரக்தியில், கடவுள் நம்பிக்கை இழந்து தவிப்பார்கள், அது வாடிக்கை, சில பல ஆண்டுகள் கழித்து ஏதேனுமொரு புனித தலத்திற்குச் சென்றால், அவர்களுடைய அந்த நம்பிக்கையற்ற தன்மையும் போய் விடும்.) ஆனால், ஒரு நாத்திகன்/பகுத்தறிவாளனாகத் தன்னைக் காட்டிக் கொள்பவன் என்னச் சொல்லுவான்? நான் பார்த்தவர்கள், விரைவில் உடல்நலம் தேறுவாய், மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு கொடு, விரைவில் உடல்நலம் தேறும் என்று கூறுவார்கள். எழுபத்து மூன்று வயதிலும் நாத்திகம் காத்த என் பாட்டன் அவன் நோய் தெரிந்த போதும் திருக்குறளின் நிலையாமை அதிகாரத்தை எங்களைப் படிக்கச் சொன்னான்.
தன்னையே கடவுளாகவும், கடவுளின் அவதாரமாகவும் சித்தரித்துக் கொள்ளும் சாய்பாபா, சில நாட்களாக மருத்துவ உபகரணங்களின் துணையோடு படுத்த படுக்கையாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு  தந்தை பெரியார் பாசறையில் பயின்ற பழுத்த பகுத்தறிவுவாதியான முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாய் பாபா உடல்நலம் தேற செய்தி அனுப்புகிறார். அதுவும் எப்படி, உங்களுடைய பக்தகோடிகளின் வேண்டுதல்படி என்று. இவரை என்னவென்று சொல்வது? இவருடைய பகுத்தறிவு எங்கு போனது? சாய்பாபாவின் வாயிலிருந்து (மறைத்து வைத்து எடுக்கப்பட்ட) வந்த லிங்கத்தைச் சூழ்ந்திருக்கும் எச்சிலாகிவிட்டாரே.

சாய் பாபாவின் உடல்நிலை சீர்கெட காரணம்

      நன்றி: http://www.alagankulam.in/      

 

       சாய்பாபாவின் உடல்நிலை சீர்கெட காரணம் அவரது சீடர்களாம் – அறக்கட்டளை முன்னாள் பொருளாளர் குற்றச்சாட்டு

Indian-Guru-Sai-Baba-Still-Critical-In-Hospital
புட்டபர்த்தி:சாய்பாபா-தந்திரங்கள் புரிந்து மந்திரங்கள் என மக்களை ஏமாற்றி தன்னை கடவுளின் மனித அவதாரமாக சித்தரித்து வந்தவர். இன்று மருத்துவமனையில் படுத்த படுக்கையாக கிடக்கும் அளவுக்கு அவருடைய நிலைமை மோசமாகிவிட்டது.
தன்னைப் போன்றதொரு மனிதன் செய்யும் தகிடுதத்தங்களை புரிந்துக்கொள்ளும் ஆற்றலை இழந்துபோன சாய் பக்தர்கள் கோடிகளாக கொட்டி சாய்பாபாவை பணத்தால் மூழ்கடித்தனர். இன்று அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் கிடக்கும்பொழுது கூட பக்தர்களுக்கு அவர் மீதான பாசம் விட்டு அகலவில்லை போலும்.
கடவுள் அவதாரம் என கூறியவர் தனக்கு ஏற்பட்டுள்ள நோயைக் கூட குணப்படுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதையும் பகுத்தறிவை தொலைத்துவிட்டவர்களால் புரிந்துக்கொள்ள இயலவில்லை. இப்பொழுது பக்தர்களை இன்னொரு முறை அதிர்ச்சியடையச் செய்யும் குற்றச்சாட்டு ஒன்றை ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் முன்னாள் பொருளாளரும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் முன்னாள் போர்டு தலைவருமான டி.கே.ஆதிகேசவலு நாயுடு தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் கிடக்கும் சாய்பாபாவின் தற்போதைய நிலைமைக்கு காரணம் அவரது சீடர்கள்தாம் என ஆதிகேசவலு சித்தூரில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து   குற்றஞ்சாட்டினார்.
இதுக்குறித்து அவர் தெரிவித்ததாவது: “சாய்பாபாவுக்கு உணவு கூட வழங்காமல் அவருடைய நெருங்கிய உதவியாளர்கள் தயங்கியுள்ளனர். அவர் உடல் நிலை சீர்கெட்டு கீழே தடுமாறி விழுந்தபொழுது உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. அறக்கட்டளையில் நடக்கும் மோசடிகள் குறித்து சாய்பாபா கவலைக் கொண்டிருந்தார். நோயால் பாதிக்கப்பட்ட சாய்பாபாவை சிகிட்சை அளிப்பதற்கு பதிலாக அவரின் பாதுகாப்பு(?) பொறுப்பை ஏற்றுள்ள சத்யஜித், ஷியாம் சுந்தர் மற்றும் டாக்டர் அய்யர் ஆகியோருடன் கூடி ஆலோசித்து சாய்பாபாவுக்கு உடல்நிலை மேலும் சீர்கெடுவதை பார்த்துக் கொண்டிருந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாய்பாபாவுக்கு காலில் வெடிப்பு ஏற்பட்ட பொழுதும் முறையான சிகிட்சையை சத்யஜித் உள்ளிட்டவர்கள் வழங்க மறுத்துவிட்டனர். அன்று முதல் நல்ல உணவை சாய்பாபாவுக்கு வழங்க மறுத்த இவர்கள் வெறும் கஞ்சியை மட்டுமே உணவாக அளித்து வந்தனர்.
இதர நபர்கள் சாய்பாபாவை காண்பதைக்கூட இவர்கள் தடுத்துவிட்டனர். சாய்பாபாவுக்கு தெரியாமல்(?) அவரது உதவியாளர்கள் தூக்க மாத்திரைகளை அளித்து வந்தனர். உலகின் பல பகுதிகளிலிருந்தும் சாய்பாபாவை காணவந்த அவரது சீடர்கள் ஒரு தடவை அவரை பார்க்க இயலாமல் நிராசையுடன் திரும்பினர். இதுப்பற்றி வினவிய பொழுது சத்யஜித்தும் அவரைச் சார்ந்தவர்களும் பதிலளிக்க தயாராகவில்லை. நான் கொஞ்ச காலமாக சத்யசாயி அறக்கட்டளையில் பொருளாளராக பதவி வகித்தேன். அங்கு நடக்கும் முறைகேடுகள் குறித்து ஐ.பி.எஸ் அதிகாரியான ஹெச்.ஜெ.தோரா, ரமன்ஜானேயுலு, பரமஹம்ஸா ஆகியோருடன் கேள்வி எழுப்பியிருந்தேன்.” இவ்வாறு ஆதிகேசவலு நாயுடு கூறினார்.
நாயுடுவின் குற்றச்சாட்டுக் குறித்து பதிலளித்துள்ள சத்ய சாய் அறக்கட்டளை, விரைவில் சாய்பாபா குணமடைவார் எனவும், 15 தினங்களுக்குள் தனது வசிப்பிடம் திரும்புவார் எனவும் தெரிவித்துள்ளது.
தனக்கு ஏற்பட்ட நோயை குணப்படுத்த முடியாமல் மருத்துவமனையை நாடியவர், தனக்கு தூக்க மாத்திரையை அளித்ததை அறிந்துக்கொள்ள இயலாதவர், தனது பாதுகாப்பிற்கு ஆட்களை நியமித்தவர் என ஏராளமான பலகீனங்களுக்கும், பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்கும் சொந்தக்காரரான சாய்பாபாவை இன்னமும் அவரது பக்தர்கள் நம்பிக் கொண்டிருப்பதுதான் வெட்க கேடாகும்.

சாய் பாபாவின் உடல்நிலை சீர்கெட காரணம் அவரது சீடர்களாம் – அறக்கட்டளை முன்னாள் பொருளாளர் குற்றச்சாட்டு 17 Apr 2011 புட்டபர்த்தி:சாய்பாபா-தந்திரங்கள் புரிந்து மந்திரங்கள் என மக்களை ஏமாற்றி தன்னை கடவுளின் மனித அவதாரமாக சித்தரித்து வந்தவர். இன்று மருத்துவமனையில் படுத்த படுக்கையாக கிடக்கும் அளவுக்கு அவருடைய நிலைமை மோசமாகிவிட்டது. தன்னைப் போன்றதொரு மனிதன் செய்யும் தகிடுதத்தங்களை புரிந்துக்கொள்ளும் ஆற்றலை இழந்துபோன சாய் பக்தர்கள் கோடிகளாக கொட்டி சாய்பாபாவை பணத்தால் மூழ்கடித்தனர். இன்று அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் கிடக்கும்பொழுது கூட பக்தர்களுக்கு அவர் மீதான பாசம் விட்டு அகலவில்லை போலும். கடவுள் அவதாரம் என கூறியவர் தனக்கு ஏற்பட்டுள்ள நோயைக் கூட குணப்படுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதையும் பகுத்தறிவை தொலைத்துவிட்டவர்களால் புரிந்துக்கொள்ள இயலவில்லை. இப்பொழுது பக்தர்களை இன்னொரு முறை அதிர்ச்சியடையச் செய்யும் குற்றச்சாட்டு ஒன்றை ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் முன்னாள் பொருளாளரும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் முன்னாள் போர்டு தலைவருமான டி.கே.ஆதிகேசவலு நாயுடு தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் கிடக்கும் சாய்பாபாவின் தற்போதைய நிலைமைக்கு காரணம் அவரது சீடர்கள்தாம் என ஆதிகேசவலு சித்தூரில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து   குற்றஞ்சாட்டினார். இதுக்குறித்து அவர் தெரிவித்ததாவது: “சாய்பாபாவுக்கு உணவு கூட வழங்காமல் அவருடைய நெருங்கிய உதவியாளர்கள் தயங்கியுள்ளனர். அவர் உடல் நிலை சீர்கெட்டு கீழே தடுமாறி விழுந்தபொழுது உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. அறக்கட்டளையில் நடக்கும் மோசடிகள் குறித்து சாய்பாபா கவலைக் கொண்டிருந்தார். நோயால் பாதிக்கப்பட்ட சாய்பாபாவை சிகிட்சை அளிப்பதற்கு பதிலாக அவரின் பாதுகாப்பு(?) பொறுப்பை ஏற்றுள்ள சத்யஜித், ஷியாம் சுந்தர் மற்றும் டாக்டர் அய்யர் ஆகியோருடன் கூடி ஆலோசித்து சாய்பாபாவுக்கு உடல்நிலை மேலும் சீர்கெடுவதை பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாய்பாபாவுக்கு காலில் வெடிப்பு ஏற்பட்ட பொழுதும் முறையான சிகிட்சையை சத்யஜித் உள்ளிட்டவர்கள் வழங்க மறுத்துவிட்டனர். அன்று முதல் நல்ல உணவை சாய்பாபாவுக்கு வழங்க மறுத்த இவர்கள் வெறும் கஞ்சியை மட்டுமே உணவாக அளித்து வந்தனர். இதர நபர்கள் சாய்பாபாவை காண்பதைக்கூட இவர்கள் தடுத்துவிட்டனர். சாய்பாபாவுக்கு தெரியாமல்(?) அவரது உதவியாளர்கள் தூக்க மாத்திரைகளை அளித்து வந்தனர். உலகின் பல பகுதிகளிலிருந்தும் சாய்பாபாவை காணவந்த அவரது சீடர்கள் ஒரு தடவை அவரை பார்க்க இயலாமல் நிராசையுடன் திரும்பினர். இதுப்பற்றி வினவிய பொழுது சத்யஜித்தும் அவரைச் சார்ந்தவர்களும் பதிலளிக்க தயாராகவில்லை. நான் கொஞ்ச காலமாக சத்யசாயி அறக்கட்டளையில் பொருளாளராக பதவி வகித்தேன். அங்கு நடக்கும் முறைகேடுகள் குறித்து ஐ.பி.எஸ் அதிகாரியான ஹெச்.ஜெ.தோரா, ரமன்ஜானேயுலு, பரமஹம்ஸா ஆகியோருடன் கேள்வி எழுப்பியிருந்தேன்.” இவ்வாறு ஆதிகேசவலு நாயுடு கூறினார். நாயுடுவின் குற்றச்சாட்டுக் குறித்து பதிலளித்துள்ள சத்ய சாய் அறக்கட்டளை, விரைவில் சாய்பாபா குணமடைவார் எனவும், 15 தினங்களுக்குள் தனது வசிப்பிடம் திரும்புவார் எனவும் தெரிவித்துள்ளது. தனக்கு ஏற்பட்ட நோயை குணப்படுத்த முடியாமல் மருத்துவமனையை நாடியவர், தனக்கு தூக்க மாத்திரையை அளித்ததை அறிந்துக்கொள்ள இயலாதவர், தனது பாதுகாப்பிற்கு ஆட்களை நியமித்தவர் என ஏராளமான பலகீனங்களுக்கும், பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்கும் சொந்தக்காரரான சாய்பாபாவை இன்னமும் அவரது பக்தர்கள் நம்பிக் கொண்டிருப்பதுதான் வெட்க கேடாகும்.

சாயிபாபா பாணியில் திருநீறு வருவித்துக் காட்டுதல்

நன்றி: http://www.thamilan26.wordpress.com/

சாயிபாபா பாணியில் திருநீறு வருவித்துக் காட்டுதல்

                     தன்னைத்தானே அவதாரம் என விளம்பரப் படுத்திக் கொள்ளும் சாயிபாபா செய்வது போலவே சாதாரண மந்திரவாதியும் திருநீறு வருவித்துக் காட்டுகிறார்.
அவரது உள்ளங்கை கீழ்நோக்கி இருக்க, கையை இரண்டு மூன்று முறை வட்டவடிவில் அசைக்கிறார். பின் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அவரது விரல் நுனிகளில் இருந்து திருநீறு கொட்டுகிறது. இந்த திருநீற்றின் தரமும் மணமும் கூட சாயிபாபா வழங்கும் திருநீற்றின் தரத்திலேயே உள்ளது. ஏனெனில் இந்த சாமியார் திருநீறு வாங்கும் அதே கடையிலிருந்துதான் இந்த மந்திரவாதியும் திருநீற்றை விலைக்கு வாங்குகிறார்.
தேவையான பொருள்கள்: வாசனை விபூதி, அரிசிச்சோறு வடித்ததில் இருந்து பெறப்பட்ட கஞ்சி, விபூதியை வில்லைகளாக தயாரித்துக் கொள்ள ஒரு தட்டு.
செய்முறை: வாசனைத் திருநீற்றை அரிசிக் கஞ்சி நீரில் கலந்து, சிறு வில்லைகளாக செய்து காயவைக்கவும். இந்த வில்லையைக் கட்டை விரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையில் மறைத்துக் கொள்ளவும். விரைப்பாக வைக்காமல் கையைத் தளர்த்தி வைத்துக் கொள்ள பயிற்சி செய்து கொள்ள வேண்டும்.
விபூதி வில்லையைப் பார்வைக்குப் படாமல் விரலிடுக்கில் ஒளித்து வைத்திருக்கும் நிலையிலேயே வணக்கம் சொல்லவும், கை குலுக்கவும், காப்பி குடிக்கவும், சாப்பிடவும், எழுதவும் கூட விரல்களையும் கைகளையும் பயன்படுத்திக் கொள்ளப் பழகி இருக்க வேண்டும். பின் கைகளைச் சுழற்றுங்கள். உள்ளங்கை கீழே போகட்டும். விரைந்த அசைவில் விபூதிக் குளிகையை விரல் நுனிகளுக்குக் கொண்டு வாருங்கள். பொடித்தூளாக நுணுக்குங்கள். பக்தரின் கைகளில் உதிருங்கள்.
மந்திரவாதியின் இதே கைச்சால முறையைச் சாமியார் பயன்படுத்துவதில்லை என்றால் பின் ஏன் அவர் சோதனைக்கு உட்பட மறுக்கிறார்? தனது முறை கைச்சால வித்தை அல்ல என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி அவர் மெய்ப்-பிக்க வேண்டாமா? எதைக் குறித்து அவர் அஞ்சுகிறார்? தான் அம்பலப்பட்டு விடுவோம் என்றா? மோசடிக்கு இடம் தராத நிலைகளின் கீழ், அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி, அவரது சக்திகள் அறிவியலுக்கும் மனித புரிதல் திறனுக்கும் அப்பால் பட்டவை என மெய்ப்பிக்க மட்டுமே கைத்திற முறையைத் தாம் கையாளவில்லை என்பதை அவதாரங்கள் முதலில் மெய்ப்பித்தாக வேண்டும்.
இந்த வித்தையை அம்பலப்படுத்த, மனிதர் தம் கைகளை வட்டமாக ஆட்டி, அதே போது தூள் செய்வதற்காக வில்லைகளை விரல்களுக்குக் கொண்டு வரும் நேரம் பார்த்து கையைத் தட்டிவிட்டால் போதும், வில்லை கீழே விழுந்து, அவர் அம்பலப் படுவார்.
கைச்சால வித்தை
கைச்சாலம் என்றால், தம் செய்முறையைப் பிறர் அறிய முடியாத அளவுக்கு மிக வேகமாக வித்தைகளைச் செய்யும் திறன் இந்தக் காரணத்துக்காகத்தான் கைகளையும் உடலையும் அசைக்கிறார்கள். பொருள்களைப் படைத்துக் காட்டுதல், பொருள்களைத் தோற்றுவித்தல், மறைய வைத்தல், ஒன்றை இன்னொன்றாக உருமாற்றுதல் முதலிய சால வித்தைச் செயல் பாட்டை மறைக்க இந்த உடலியக்கம் உதவு கிறது.

———–நன்றி:- பி.பிரேமானந்து “அறிவியலா, அருஞ்செயலா”

இணையத்தில் அம்பலமான சாய்பாபா

நன்றி: thamilan26.wordpress.com

இணையத்தில் அம்பலமான சாய்பாபா

                     கடவுள் அவதாரம் எனக்கூறிக் கொள்ளும் சாயிபாபாவை பல ஆண்டுகளாக திராவிடர் கழகம் அம்பலப்படுத்தி வருவது தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. திராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பல முறை சாயிபாபாவின் மோசடிகளை தோலுரித்துக் காட்டியுள்ளார். பாபா செய்யும் மேஜிக்கு களை தி.க. பிரச்சாரகர்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து செய்து காட்டி வருகின்றனர். நாம் இப்படிப் பகுத்தறிவு பரப்புரைகளை செய்து வரும் நிலையில் சாயிபாபாவின் முன்னாள் சீடர்கள் இணைய தளத்தில் இந்த வேலையை செய்து அசத்தியுள்ளனர். முன்பு ஒரு முறை ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு சாயிபாபா முன்னாள் சீடர் மலேசியாவைச் சேர்ந்த ஹரிராம் ஜெயராம் என்பவர் சாயிபாபா வின் மோசடி குறித்து தனது கருத்தை கடிதம் வழி எழுதியிருந்தது இங்கு நினைவு கூறத் தக்கது.
இப்போது இவரைப் போன்றே சில சீடர்கள் இந்த மோசடிகளை அம்பலப்படுத்த தனி இணைய தளத்தையே துவக்கியுள்ளனர். www.exbaba.com என்ற இணைய தளம் பாபாவை அக்குவேறு ஆணிவேறாக புட்டுப் புட்டு வைத்திருக்கிறது. அதிலுள்ள படங்க ளையே இங்கே கொடுத் திருக்கிறோம். வீடியோ படமாக இணையத்தில் இந்தப் படம் வழங் கப்பட்டுள்ளது.
சாய்பாபா பற்றி பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது இந்த இணையதளத்தின் நோக்கமாகும். ஏழு முதல் முப்பது வயது வரையுள்ள அவருடைய ஆண் பக்தர்களுடன் சாய்பாபா வைத்திருந்த பாலியல் உறவுகளைப்பற்றி நிறை யச் செய்திகள் காணப் படுகின்றன.
1960-களிலேயே அங்கொன் றும் இங்கொன்றுமாகச் சில கட்டுரைகள் வெளிவந்தன. இந்த இணைய தளத்தில், டேவிட், மற்றும் பயே பெய்லி ஆகியோரின் கண்டுபிடிப்புகள் (Findings) எனும் அதிகார பூர்வமான ஆவணம் இங்கு முதல் இடத்தைப் பெறுகிறது. அது இணைய தளத்தில் தோன்றியது முதல் பல செய்திகள் அடுத்தடுத்து வந்தன. பக்தர்கள் கோபத்துடனும் குழப்பத்துடனும் தங்களுடைய நிலையை வெளிப்படுத்தினர். ஆனால் சாய்பாபாவின செயல் களுக்கு இலக்கானவர்கள், அவற் றால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பாராட்டுதல்களைத் தெரிவித்த னர்; இதுவரை எதையும் வெளிப் படுத்தாமல் இருந்தவர்கள், இப் பொழுது தைரியமாகத் தங்களு டைய அனுபவங்களைகூட முன் வந்தனர். டேவிட் மற்றும் ஃபாயே பெய்லி நீண்டகாலம் சாய்பாபா வின் பக்தர்களாக இருந்தவர்கள். தவறான பாலியல் உறவு, மோசடி, கொடுக்கப்பட்ட நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது ஆகியவற்றுடன், சாய் பாபாவைக் கொலை செய்ய முயன்ற ஒரு செய்தியை அவர்கள் சொல்லு கிறார்கள். அதன் விளை வாகப் பல முக்கியமானவர்கள் சாய்பாபா இயக்கத்தில் இருந்து வெளியேறி விட்டனர்.
பெய்லியின் கண்டுபிடிப்பு களும், அவற்றிற்கு முன்னும் பின் னும் சொல்லப்பட்ட ஒவ்வொன் றும் இந்த இணையதளத்தில் ஆங்கில மூலத்தில் தரப்பட்டிருக் கிறது. முந்தைய பக்தர்கள் டச்சு மொழியில் கொடுத்துள்ள செய்தி கள் ஆங்கில மொழி பெயர்ப்பு களாகத் தரப்படும். சொல்லப்படும் செய்திகளை நம்ப முடியாமல் தலையாட்டுப வர்கள்கூட, திறந்த மனத்துடன் இணைய தளத்தைத் தொடர்ந்து படிப்பார்கள் என நம்புகிறோம். தங்களுடைய சொந்த ஆராய்ச் சியை மேற்கொள்ளத் தொடங்க ஆவல் கொள்ளுவார்கள் எனவும் நம்புகிறோம். உதவி செய்யவும் மேற்கொண்டு தகவல்களைத் தரவும் பலர் இருக்கிறார்கள் என்று இவர்கள் கூறுகிறார்கள்.
பாபாவின் போதனைகளில் முக்கியமாக வரும் பாலியல் பக்த ரின் ஆன்மீகக் கண்ணோட்டத் தைக் குறைந்துவிடுகிறது. அவரின் ஆஸ்ரமத்தில் ஆண்களும் பெண் களும் தனித் தனியாகத்தான் தங்க வைக்கப் படுகின்றனர். திருமண மான தம்பதிகள் மட்டும் சேர்ந்து இருக்கலாம். கடந்த சில ஆண்டு களாக இது மாறிவிட்டது. ஆண் பக்தர்களை மட்டும் பாபா தனியாக அழைத்து தரிசனம் தருகிறார். அப்போது எவரும் உடன் இருப்பதில்லை. எந்தப் பெண்ணையும் அவர் தனியாக அழைத்துப் பேசுவதில்லை.
பாபாவின் ஓரினச் சேர்க்கை பற்றி முதன் முதலாக எழுதிய அமெரிக்கக தால் ப்ரூக் 1970-71-இல் பாபாவுடன் ஒன்றரை ஆண்டுகள் தங்கி யிருந்தார். தனி தரிசனங்களின் போது பாபா அவரைத் தழுவிக் கொண்டு அவரது பாலுணர்வைத் தூண்டினார் என்று அவர் கூறினார். 1980-இல் மலேசிய இந்திய மாணவர்கள் ஒரு பெரும் பிரச்சினையை எழுப்பினர். சாயிபாபா தங்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாக அவர்களில் பலர் கூறியது ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாபா நிறுவியுள்ள கல்லூரி யில் படித்துக் கொண்டிருந்த போது, பாபா தங்களைக் கெடுத்து விட்டதாக பல மலேசிய இந்திய மாணவர்கள் கூறினர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த கெய்த் ஹார்ட் என்பவர் 1990 இளவேனில் காலத்தில் பாபாவைத் தனியாகச் சந்தித்தபோது அவரைத் தழுவிக் கொண்ட பாபா அவரின் உறுப்பைத் தூண்டிவிட்டதாகக் கூறப்பட்ட பிரச்சினை ஹாலந்தில் 1992 ஜனவரியில் பேசப்படத் தொடங்கியது. கடந்த ஆண்டு இதுபோன்ற பல கதைகள் வெளிவந்தன. இண்டர்நெட்டிலும் பத்திரிகைகளிலும் வந்த செய்திகளைத் தொகுத்து 20 புகார்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றில் 10 நிகழ்ச்சிகளைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களே நேரில் கூறியுள்ளனர். மற்ற 10 நிகழ்ச்சிகளில் இரண்டாம் தரப்பு மனிதர்கள் தகவல் தந்துள்ளனர். இத்தகைய தனிச் சந்திப்புகளின்போது பாபாவுடன் பாலியல் தொடர்பு கொண்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த தால் ப்ரூக், சாம், யங், 15 வயதுச் சிறுவன், ஸ்வீ டன் நாட்டைச் சேர்ந்த கான்னி லார்சன் இங்கிலாந்தின் கெயித் ஹார்டு, இரானின் செயித் கொராம் ஷெகல், ஜெர்மனியின் ஜென்ஸ் சேத்தி, ஆஸ்திரேலி யாவின் ஹான்° டி க்ரேகர் ஆகிய 8 பேர் நேரடியாகத் தகவல் தந்துள்ளனர். பாபாவுடன் 16 ஆண்டுக ளாகப் பாலியல் உறவு கொண்ட தாக இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் பாடியா தெரிவித்துள் ளார். 1986-இல் பாபாவைச் சந் தித்த 23 வயது ஸ்வீடன் இளை ஞர் (பின்னர் தற்கொலை செய்து கொண்டார்), இங்கிலாந்து நாட்டு மைக்கேல் பெண்டர் (பின்னர் தற்கொலை செய்து கொண் டார்) 1989-இல் பாபாவைப் பலமுறை தனியாகச் சந்தித்தவர், ஸ்வீடன் நாட் டைச் சேர்ந்த 18 வயதுச் சிறுவன் 1998-1999-இல் பாபாவை 8 முறை தனியாகச் சந்தித்தவன், மற்றும் இந்திய மாணவர்கள் பலரும் சாய்பாபா தங்களுடன் பாலியல் உறவு கொண்டதாக ஒப்புக் கொண்டு தகவல் தந்துள்ளனர். பாபாவைத் தனியாகச் சந்தித்த போது தங்களின் உறுப்புகளைத் தூண்டிவிட்டதாக அbரிக்கா வின் எம்.டி., ஜெட் கெயர்ஹான், நெதர்லாந்தின் மாத்திஜிஸ் வான் டெர் மீர், இங்கிலாந்தின் டேவிட் பால் டிப்மெக் ஆகியோர் தகவல் தந்துள்ளனர். இவை தவிர பாபாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்க ளின் குடும்பத்தினர் என ஏராள மானவர்களின் குற்றச்சாட்டுகள் இணையதளத்தில் குவிந்துள்ளன. அத்தனையும் எழுத பக்கங்கள் போதாது. என்றாலும் உண்மை தொடர்ந்து அவைகளை வெளி யிடும். வெகு மக்களைச் சென்றடை யும் ஊடகங்கள் இது போன்ற உண்மைகளை வெளியிடத் தயங் குகின்றன. டெகல்கா.காம் இணைய தளம் பா.ஜ.வினர் லஞ்சம் பெற்ற வீடியோ காட்சியை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியதைப் போல் இந்த சாய்பாபா முன்னாள் சீடர்களின் இணையதளமும் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-இளையமகன்
கு.வெ.கி.ஆசான், த.க.பாலகிருட்டிணன் உதவியுடன்.
நன்றி: உண்மை மாதமிருமுறை இதழ் (2004 அக்டோபர் 1-15)

இப்படித்தான் அம்பலமானார் சாய்பாபா

மார்ச் 18, 2010

படவிளக்கம்:
1. முதலில் தண்ணீர் குடிப்பது போல பாவனை
2.லிங்கம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கைக்குட்டையை கையிலெடுக்கிறார்.
3. வாயைத் துடைப்பது போல் பாவனை
4. அப்படியே லிங்கத்தை வாயினுள் திணிக்கிறார்.
கவனிக்க: இடதுகை விரல்கள்
5. வாய்க்குள் லிங்கம் சென்றதும் முகத்தைத் துடைப்பது போல் ஒரு நடிப்பு.
6. மீண்டும் தண்ணீர் நடிப்பு
(5,6,7-படங்களில் கவனியுங்கள் உதவியாளரின் பரபரப்பு.)
7. வாந்தி எடுப்பது போல் நடிப்பு
8, 9 வாயில் வைத்திருந்த லிங்கம் வெளியே வருகிறது.