Tuesday, April 26, 2011

கருணாநிதியிடம் இருப்பது ஆன்மீகமா? பகுத்தறிவா? - தமிழச்சி


கருணாநிதியிடம் இருப்பது ஆன்மீகமா? பகுத்தறிவா?

-- தமிழச்சி

நன்றி: http://www.tamizachi.com/
                

            "நான் கடவுளின் அவதாரம்" என்று கூறுபவர் சாய்பாபா. அதை நம்புவதற்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் பல நாடுகளிலும் ´ஏமாளிகள்´ இருக்கிறார்கள் ´பக்தர்கள்´ என்னும் பெயரில்.

வெற்றுக் கைகளை ஆட்டி, தூக்கி, சுற்றி, குலுக்கி விட்டு கைகளை விரித்துக் காட்டினால் அதில் திருநீரு, மோதிரம், தங்க சங்கிலி, வார்ச் என்று வருவதை பக்தர்களுக்கு கொடுப்பார் சாய்பாபா.

´விலை மதிப்பற்ற ஏதோ காணக் கிடைக்காத பொக்கிஷத்தைப் போல்´ பயபக்தியுடன் பக்தர்களும் வாங்கிக் கொள்வார்கள்.

கை வேலை இப்படி இருக்க, வாய் வழியாக காட்டும் வித்தையை பார்ப்போம்.

´இழுப்பு வந்தவர்களுக்கு நுரை தள்ளுவது போல், திடீரென சாய்பாபாவுக்கு வந்தால் அதில் சிவலிங்கமும் வரும்.´ இதுதான் சாய்பாபாவின் ஸ்பெஷல்.

ஆனால், இதைவிட சிறந்த காட்சிகளை பெரிய ´மேஜிக் ஷோ´ நடத்துபவர்கள் மேடையில் நிகழ்த்துகிறார்கள். அவர்களுக்கு கிடைக்காத பேரும், புகழும், பணமும், அரசியல் செல்வாக்கும், ´காவி அணிந்த ஆசாமி´க்கு கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் ஆன்மீகம்.

கை வேலை, வாய் வேலை இப்படி இருக்க இன்னொரு உறுப்பின் வேலை குறித்தும் பேசப்படாவிட்டால் சாய்பாபாவின் புகழ் முழுமை பெறாது.

´அந்த´ உறுப்புக் கதைக்கு போகும் முன், அந்நிகழ்ச்சி எப்படி நடத்தப்படுகிறது என்பதை பாருங்கள்.

பெரும்பான்மையான மக்கள் வழிபாட்டிற்காக காத்திருக்கும் இடத்தில் சாய்பாபா யாரை நோக்கி விரலை காட்டுகிறாரோ அவர் சாய்பாபாவுடன் செல்ல வேண்டும். அதற்கு பின் சென்ற நபருக்கு என்ன நடந்தது என்பதோ அல்லது அது குறித்து அறிந்து கொள்ளும் அறிவோ பக்தர்களிடம் இல்லை.

சாய்பாபா அழைத்துச் செல்லும் நபர் பெரும்பாலும் சிறுவர்களாகவே இருப்பார்கள். சிறுமிகளைளோ, பெண்களையோ சாய்பாபா அழைத்துச் செல்வதில்லை.

´அப்படி என்னத்தான் செய்கிறார் சாய்பாபா?´ என்று வெளியே தெரியாமல் இருந்த இரசியத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ´அலாயா´ என்பவர் மூலம் வெளியானது.

´சாய்பாபா ஓரினச் சேர்க்கையாளர்.´

17-வயதிலிருந்து ´அலாயா´வுடன் ஓரினச்சேர்க்கை வைத்திருந்ததாக எழுந்த பாலியல் குற்றச்சாட்டிற்கு பின் மேலும் பல பாலியல் குற்றச்சாட்டுகளும் வந்தன. ஆனால் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாய்பாபாவின் ஆசிரமத்தில் இருந்த நான்கு இளைஞர்கள் சாய்பாபாவை கொல்ல முயன்றதாக கூறி அவர்களை அந்த இடத்தியே சுட்டுக் கொன்றது குறித்து பரபரப்பாக செய்திகள் வந்தபோதும் இதுவரையில் அக்கொலைகளின் பின்னணியை விசாரிக்கக்கூட இல்லை இந்திய அரசு.

2008-இல், ´சாய்பாபாவின் உண்மை முகம்´ என்று பிபிசியில் அனைத்து தில்லு முல்லுகளையும் அம்பலப்படுத்தியும் கூட இந்திய அரசு கண்டு கொள்ளவில்லை.

மற்ற போலி சாமியார்களுக்கு சளைத்தவரல்லாத சாய்பாபா இந்திய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கிய பிரபலங்களுடன் நிகழ்வுகளில் கலந்து கொண்டு தனது மோசடிகளுக்கு அதிகாரவர்க்கத்தை அனுசரித்து போகும் அளவுக்கு பொருளாதார பலத்துடன் ஆன்மீக மோசடியில் முன்னணியில் இருப்பவர்.

இந்த கடவுளின் அவதார நாயகன் குறித்து சில தினங்களாய் பரபரப்பாய் செய்திகள் வருகின்றன.

நுரையீரல் மற்றும் நெஞ்சு கோளாறு காரணமாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சாய்பாபாவின் உடல் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் செயற்கை சுவாசம் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்தி.

ஏதேதோ மாயாஜாலத்தில் வழவழித்த சாய்பாபாவுக்கு, மூச்சு விட தடுமாறுகிறார்.

கடவுளின் அவதாரத்திற்கு வந்த சத்திய சோதனையா இது? அல்லது எல்லா மனிதர்களுக்கும் முதுமையில் வரக்கூடிய உடல்பலவீனங்களா? என்பதை கவனியுங்கள்.

ஒரு பக்கம் சாய்பாபா உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்து புட்டபர்த்தியில் இருக்கும் சாய்பாபா மருத்துவனை முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம். பதட்ட நிலையில் இருப்பதால் புட்டபர்த்தியில் 144 தடை உத்தரவு.

இன்னொரு பக்கம் பல்வேறு இடங்களில் சாய்பாபா உடல்நிலை சரியாக வேண்டும் என்று கோயில்களில் பிரார்த்தனை. முக்கிய அரசியல் பிரமுகர்களில் இருந்து சாய்பாபா உடல்நிலை குறித்து கவலை.

இதில் தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலும் சாய்பாபா உடல்நிலை குறித்து கடிதம் எழுதுகிறார் கருணாநிதி.

´சாய்பாபாவின் உடல்நிலை தேறி வழக்கம் போல் மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்க வேண்டும்´ என்று என்று கோரிக்கை வேறு வைக்கிறார் கருணாநிதி.

* [செய்தி: http://www.maalaimalar.com/2011/04/05142428/sai-baba-get-well-soon-karunan.html]

"சாமியார்களின் ஆசீர்வாதத்தில் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்துவிட முடியும்" என்ற நிலைக்கு சென்று விட்டாரா? பகுத்தறிவு வழி வந்ததாக சொல்லிக் கொள்ளும் கருணாநிதி?

´ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது விசாரிக்கும் அக்கறை குறித்து இங்கே விவாதம் இல்லை.´

´ஆன்மீக மோசடி பேர்வழி, உடல்தேறி மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்க வரவேண்டும் என்பது குறித்தே விமர்சனம்´ என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகிறோம்.

´இன்றைய கருணாநிதியின் பகுத்தறிவு சிந்தனை´ இந்த எல்லைக்குள் தான் இயங்குகிறது.

இந்த சிந்தனை தான் மஞ்சள் துண்டுக்கு மாற வைத்தது. சாய்பாபாவிடம் தன் குடும்பத்தினருக்கு ஆசிர்வாதம் வாங்க வைத்தது. இதன் பெயரும் பகுத்தறிவுதான் என்கிறாரா கருணாநிதி?

"ஏழைகளை வஞ்சிக்க ஓர் ஏற்பாடு. அதற்குப் பெயர் மதம். உழைக்கிறவனை ஒடுக்குவதற்கு ஓர் இயந்திரம் - அதற்குப் பெயர் ஜாதி. பகற் கொள்ளை அடிப்பதற்கு ஒரு திட்டம் - அதற்குப் பெயர் பூசை, சடங்கு, தட்சணை" என்கிறார் அண்ணா.

இத்தனை இழி வேலையையும் செய்பவர் தான் சாய்பாபா.

ஆனால், சாய்பாபா மீதுள்ள பாசத்தில் பகுத்தறிவென்ன சாதாரண அறிவை கூட ஒதுக்கி விட்டு, ´சாய்பாபா உடல்நலம் தேறி வழக்கம் போல் ஆசீர்வதிக்க வரவேண்டும்´ என்கிறார் கருணாநிதி.

"பேராசையும், சோம்பேறித்தனமும், ஏமாற்றும் தன்மையும் இல்லாவிட்டால் பிரார்த்தனைக்கு இடமே இல்லை. மற்றும், முன் குறிப்பிட்ட தேவைகளுக்காகப் பிரார்த்தனை செய்வதும், பிரார்த்தனையில் அவைகளை அடையப் பார்ப்பதும், முன் குறிப்பிட்ட சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ள கடவுளைச் சுத்த முட்டாள் என்று கருதி அவனை ஏமாற்றச் செய்யும் சூழ்ச்சி" என்று பெரியார் கூறுவார்.

பெரியார், அண்ணா வழி வந்ததாக கூறும் கருணாநிதியோ முற்றாக ஆன்மீகவாதியாக பேசுகிறார். அதை ஆன்மீகம் என ஏற்க மறுக்கிறார். தான் இன்னும் பகுத்தறிவு வழி நடப்பதாகவே கூறி சுயஇன்பம் அடைகிறார்.

சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்திலும், ´நீங்கள் பகுத்தறிவுவாதியாக வேண்டுமானால் திமுக வுக்கு ஓட்டு போடுங்கள்´ என்கிறார். பகுத்தறிவை கூட மொத்தமாக குத்துகைக்கு எடுத்துக் கொண்டதா திமுக?

கருணாநிதி என்னும் அரசியல் மோசடி ஆள் தாளாரமாக அரசியல் பேசட்டும். அதற்காக பெரியாரையும், பகுத்தறிவையும் போட்டு குழப்பிப் கொள்ளக் கூடாது என்பதே பெரியார் தொண்டர்களின் வேண்டுகோள்.

இறுதியாக ஒன்று. பெரியார் கூறுவார்:

"ஆத்திகர்கள் கொள்கைப்படி, மனிதனுடைய செய்கையும் எண்ணமும், ‘சித்திரபுத்திரனுக்கோ’ ‘கடவுளுக்கோ’ தெரியாமல் இருக்கவே முடியாது. இதற்காகப் பலன் கொடுக்கத் ‘தீர்ப்பு நாளும்’, ‘எமதர்ம ராஜாவும்’ இருந்தே இருக்கிறார்கள். மத்தியில் பிரார்த்தனை, பூசனை என்பவை மேற்கண்ட இரண்டையும் ஏமாற்றவா அல்லது குருவும், புரோகிதனும் பிழைக்கவா என்பது யோசித்தால் விளங்காமல் போகாது."

தமிழச்சி
05.04.2011


தொடர்புடைய இணைப்புகள் :

சாய்பாபாவின் லீலைகள். பகுதி 1
http://www.youtube.com/watch?v=hQJgvS6ILUg

சாய்பாபாவின் உண்மை முகம். பகுதி 2
http://www.youtube.com/watch?v=vdsYsRaNA4k&feature=related

சாய்பாபாவின் உண்மை முகம். பகுதி 3
http://www.youtube.com/watch?v=i1cNHc6lask&feature=related

சாய்பாபாவின் உண்மை முகம். பகுதி 4
http://www.youtube.com/watch?v=QmUn7lkGevE&feature=related

சாய்பாபாவின் உண்மை முகம். பகுதி 5
http://www.youtube.com/watch?v=iK3QlPGYiJA&feature=related

சாய்பாபாவின் உண்மை முகம். பகுதி 6
http://www.youtube.com/watch?v=RskbqOOh6Ig&feature=related

சாய்பாபாவின் உண்மை முகம். பகுதி 7
http://www.youtube.com/watch?v=M3oWmzZI_hs&feature=related

No comments: